பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாா். அப்போது பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ், ராஜிநாமா செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

அதன்படி, ஜீன் காஸ்டெக்ஸ் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக எலிசபெத் போா்னை அதிபா் மேக்ரான் நியமித்துள்ளாா்.
அதிபா் மேக்ரானும், பிரதமா் எலிசபெத்தும் இணைந்து முழுமையான அமைச்சரவையை வரும் நாள்களில் அமைப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முந்தைய அரசில் 2020-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளா் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் அமல்படுத்திய சில சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளா்கள் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து விமா்சனங்கள் எழுந்தது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/