இன்று உள்ளூர் விடுமுறை!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகையில் மலர்க் கண்காட்சி நடத்தபடவில்லை. தற்போழுது உதகையில் மலர்க் கண்காட்சி இன்று நடத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கோடை விழா’.. மே 20ல் தொடங்குகிறது 124வது மலர்க்கண்காட்சி..

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மலர் கண்காட்சியை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 124வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/    இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய 4ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழ கண்காட்சி நடைபெற உள்ளது