இன்றே கடைசி நாள்..வங்கியில் வேலை வேண்டுமா ??

இந்திய அஞ்சலகக் கட்டண வங்கியில் (Indian Post Payment Bank) காலியாக பணியிடங்களை விண்ணப்ப செயல்முறை இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. இந்திய அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் .

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 650 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

காலியிடங்கள்: 650

பதவி : அதிகாரம் சார்ந்த (Executive) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

கல்வித் தகுதி: 10, +2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :குறைந்தது, 2 ஆண்டுகள் கிராம அஞ்சல் பணியாளராக பணி செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2022 ஏப்ரல் 30 அன்றுள்ளபடி, விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும்,30 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு ,பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பின்பாக, தேர்வர்களின் செயல்திறன் அடிப்படையில், பணியானது 1 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.750 தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளிற்குள் செலுத்த வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை !!

விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள், https://www.ippbonline.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : மே 27ம் தேதி (இன்று)