உச்சத்தை தொட்ட தக்காளி விலை!!

தமிழகத்திற்கு தேவையான தக்காளிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் விற்பனைக்கு கோயம்பேடு மார்க்கெட் கொண்டுவரப்படுகிறது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 ஆக சரிந்திருந்தது.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலத் தக்காளிகளே கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது.

சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக அதிகரித்து உள்ளது. தக்காளி சில்லறை விற்பனை விலை ரூ.80 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்து அறிமுகமாகும் சாம்சங்கின் புதிய 5G போன்

அதே நேரத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.