ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை?!!

கோடை மழை பரவலாக பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 80 முதல் 90 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் 100 ரூபாய்க்கும் விற்பனையானது

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. தினசரி 75 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.

சென்னைக்கு தினமும், 10 லட்சம் கிலோ தக்காளி தேவையுள்ள நிலையில், நேற்று 40 லாரிகளில், 6 லட்சம் கிலோ தக்காளி வந்துள்ளது.

தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி.. அரசு அதிரடி..!!!!   நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்