திப்பு சுல்தானுக்கு அஞ்சலி

திப்பு சுல்தான், மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782-ம் ஆண்டிலிருந்து 1799-ம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர்.

திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான வாதிமாவின் மகனாவார்.திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில- மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார்.

மே 4, 1799-ம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் போரின் போது இறந்தார்.திப்புவின் மைசூர் அரசை பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.

ஆடுகளை போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியை போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/