விக்னேஷ் சிவனின் உருக்கமான இன்ஸ்டா பதிவு!!

2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன் விக்னேஷ் சிவன்

போயஸ் கார்டனில் கட்டி வரும் வீட்டுக்கு குடிபோன உடனே திருமணம் நடக்கும் என பேச்சுவார்த்தைகள் கிளம்பின.

நயன்

நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ளஉள்ளார்

இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் “சீரடியில் இருந்து என் கண்மணியுடன் சாய்பாபாவை சந்திக்கும் நன்றியுணர்வு பயணம்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/