இணையத்தில் வைரலான விக்ரம் டிரைலர்!

விக்ரம் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

விக்ரம் புரோமோஷனுக்கு பிரபல யூ டியூப் சேனலில் களமிறங்கும் கமல்ஹாசன்

விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோரும் நடிப்பில் மிரட்டியிருக்கின்றனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக விக்ரம் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இலவச கல்வி- மே 18 கடைசி நாள்..

இதில் விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த குழுவினரும் கலந்து கொண்டனர். படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின், பா. ரஞ்சித் மற்றும் சிம்பு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி கலக்கலான நடனம் ஆட, அவருடன் சேர்ந்து கமலும் ‘பத்தல பத்தல’ பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.