சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதோஷம் மற்றும் வைகாசி பெளணர்மியை முன்னிட்டு நாளை முதல் வரும் 16-ஆம் தேதி வரை பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலை ஏறி கோயிலுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி நாட்களில் மழை பெய்தால் திடீர் காட்டாறு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையால் மலையேற தடை விதிக்கப்படும்.