இன்று தங்கம் வாங்க சிறந்த நேரம் என்ன?, வீட்டில் பூஜை செய்யும் முறை எப்படி ??

சித்திரை மாதத்தின் அமாவாசை அடுத்த வளர்பிறையில் வரும் 3ம் நாள் வளர்பிறை திருதியை அட்சயத் திருதியை.

அட்சய திருதியை நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி வீடு சுத்தம் செய்து வழக்கமான பூஜை செய்ய வேண்டும். கலசம் வைத்துப் பூஜை செய்யும் வழக்கம் உடையவர்கள் பூஜை அறையில் மனைப்பலகையில் வாழையிலை இட்டு பச்சரிசி பரப்பி, கலசம் வைக்க வேண்டும்.

ஶ்ரீலட்சுமி நாராயணர் படம் அல்லது திருப்பதி ஏழுமலையானின் படத்திற்கு மலர் சாத்தி சந்தனம் குங்குமம் இடலாம். அரிசி, உப்பு, பருப்பு என வீட்டிற்கு தேவையானதை வாங்கி கலசத்தின் முன்பாக வைத்து வழிபட வேண்டும்.

பால் பாயாசம் செய்து நைவேத்தியம் செய்வது சிறப்பு. அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யலாம். வெண்மை , மஞ்சள் நிற மலர்களையும் கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு.

இந்நாளில் எந்த சுபகாரியங்களில் ஈடுபட்டால், இரட்டிப்பு சுபபலன்கள் உண்டாவது உறுதி. இதனால் வெண்மை நிறப் பொருட்கள் வாங்குதல் கூடுதல் சிறப்பு. உப்பு, பால், அரிசி இவைகளை வாங்கலாம்.

காலை 11 முதல் 12 வரை சனி ஹோரை

பகல் 12 முதல் 1.30 மணி வரை குருஹோரை
மாலை 5 முதல் 6 மணி வரை சுக்கிர ஹோரை
மாலை 7 முதல் 8 மணி வரை குரு ஹோரையிலும் தங்கம் வாங்கிட தங்கம் நம்முடன் தங்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/