8வது ,10வது தேர்ச்சி பெற்றவர்களும் அரசு வேலை!!

எஃப்சிஐ (FCI) என்று அழைக்கப்படும் ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (Food Corporation of India) ஆனது காலி இடங்களை நிரப்புவதற்காக, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை விரைவில் ஏற்கவுள்ளது.

குரூப் 2, குரூப் 3, குரூப் 4 ஆகிய பல பதவிகளுக்கான இந்த விண்ணப்ப செயல்முறை ஆனது வருகிற ஜூலை மாதம் தொடங்கும்

பணியிடங்கள் : 4,710

இந்தவேலை வாய்ப்பின் கீழ், குரூப் 2 வில் 35 பணியிடங்களும், குரூப் 3 இல் 2521 இடங்களும், குரூப் 4 இல் (சௌகிதார்) 2154 இடங்களும் நிரப்பப்படும்

கல்வி தகுதிகள் : 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு அல்லது பட்டதாரி நிலைகளில் தேர்ச்சி

ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளமான recruitmentfci.in ஐ தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் பரிசோதனை, பொறுமைத் தேர்வு (patience test) மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.