இந்திய ரயில்வேயில் அப்ரெண்டீஸ் பணிகள் … 10ம் வகுப்புத் தேர்ச்சி

இந்திய ரயில்வேயில் , வடகிழக்கு எல்லை ரயில்வே (Northeast Frontier Railway) காலியாக உள்ள 5, 636 அப்ரெண்டீஸ் (Act Apprentices ) பணிக்கு காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை வடகிழக்கு எல்லை ரயில்வே (Northeast Frontier Railway)
காலியாக உள்ள வேலையின் பெயர் அப்ரெண்டீஸ் (Act Apprentices ) வேலை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/06/2022 இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.
கல்வித் தகுதி விவரம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத் தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் / பள்ளியில் 50% மதிப்பெண் பெற்று 10ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. அல்லது அதற்க்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 01.04.2022 தேதியின் படி கட்டாயம் 15 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் 24 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. SC/ST விண்ணப்ப தாரர்களுக்கு 5 வருடமும் , OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடமும் வயது விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம் மொத்தம் 5, 636 பணிகள் காலியாக உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பிக்கும் நபர்கள் merit list முறையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் திருப்பி செலுத்தப்பட மாட்டாது. SC/ST/PWD/பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

NFR ஆட்சேர்ப்பு 2022 காலியிடங்கள் (NFR Recruitment 2022 Vacancy) :

UNITS (Divisions/ Workshops) No. of Apprentices
Katihar (KIR)& TDH workshop 919
Alipurduar (APDJ) 522
Rangiya (RNY) 551
Lumding (LMG), S&T/workshop/ MLG (PNO) & Track Machine/MLG 1140
Tinsukia (TSK) 547
New Bongaigaon Workshop (NBQS) & EWS/BNGN 1110
Dibrugarh Workshop (DBWS) 847
Total 5636

NFR ஆட்சேர்ப்பு 2022 முக்கிய தேதிகள் :

இணையதளத்தில் அறிவிப்பு வெளியான தேதி 30/05/2022
ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01/06/2022
ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி தேதி 30/06/2022

இணையதள முகவரி

https://indianrailways.gov.in/

அறிவிப்பு விவரம்

https://nfr.indianrailways.gov.in/cris/uploads/files/1653892024646-Act%20App%20Notification%202020-23%20Final.pdf

இந்த இணைப்பில் (Link) காணவும்