ரூ.1,12,400/- ஊதியம் வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு…

cgcri-technician-technical-assistant-recruitment-2022

மத்திய கண்ணாடி மற்றும் செராமிக் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CGCRI) வெளியிட்ட அறிவிப்பில் Technician மற்றும் Technical Assistant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR-CGCRI காலிப்பணியிடங்கள்:
மத்திய கண்ணாடி மற்றும் செராமிக் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CGCRI) காலியாக உள்ள Technician பணிக்கு என 32 இடமும், Technical Assistant பணிக்கு என 38 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technician & Technical Assistant கல்வி தகுதி:
Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI படித்தவர்களாக இருக்க வேண்டும்.
Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, B.Sc Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Technician & Technical Assistant வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Technician & Technical Assistant ஊதியம்:
Technician பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2 ஊதிய அளவின் படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Technical Assistant பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 6 ஊதிய அளவின் படி ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CGCRI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

LINK – https://www.cgcri.res.in/