DFCCIL நிறுவனத்தில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை

dfccil-sap-consultant-team-lead-basis-fi-co-job-notification-2022

DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அறிவிப்பில் SAP Consultant / Team Lead, SAP consultant (BASIS, FI/co) பதவிகளுக்கு சில பிரிவுகளின் கீழ் மொத்தமாக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DFCCIL கல்வித் தகுதி:

  • SAP Consultant / Team Lead பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science / Computer Application / IT பாடப்பிரிவில் MBA / BE / B.Tech பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • SAP consultant (BASIS, FI/co) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / CA / ICWA / MBA / MCA போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இத்துடன் ஏதேனும் ஒரு துறையில் அல்லது பிரிவில் SAP Certification வைத்திருப்பது அவசியமாகும்.

DFCCIL வயது வரம்பு:

  • SAP Consultant/Team Lead பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
  • SAP consultant (BASIS, FI/co) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

DFCCIL ஊதிய விவரம்:

  • SAP Consultant / Team Lead பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.2,00,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.
  • For SAP consultant -FI / CO, PS, MM, HCM / PR பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,50,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு முறை:
14.06.2022 ம் தேதி அன்று இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

OFFICIAL LINK https://dfccil.com/