தமிழ் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை…!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.

இதில் காலியாக உள்ள Part Time Sweeper பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Part Time Sweeper பணிக்கு என்று மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆண்களுக்கு 03 பணியிடங்கள் மற்றும் பெண்களுக்கு 01 பணியிடமும் நிரப்ப உள்ளது.

தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
01.07.2022ம் அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் ரூ.3,000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LINK – https://dharmapuri.nic.in/