ரூ.1 லட்சம் சம்பளத்தில் ESIC நிறுவன வேலை…!

esic-senior-resident-specialist-job-notification-2022-last-date

கடந்த மாதம் ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Resident, Specialist பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) Senior Resident (ESIC) பணிக்கு என 03 பணியிடங்களும், Senior Resident (GDMO) பணிக்கு என 16 பணியிடங்களும், Specialist (Full / Part Time) பணிக்கு என 06 பணியிடங்களும் காலியாக உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PG Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • 10.06.2022 அன்றைய நாளின் படி, Senior Resident பணிக்கு அதிகபட்சம் 47 வயது எனவும், Specialist (Full / Part Time) பணிக்கு அதிகபட்சம் 67 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு முன் அனுபவம் உள்ளவராக Senior Resident (ESIC) பணிக்கு ரூ.67,700/- என்றும், Senior Resident (GDMO) பணிக்கு ரூ.1,14,954/- என்றும், Specialist (Full / Part Time) பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும் மாத சம்பளம் வழங்கப்படும்.
  • Gen / OBC பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.250/- மற்றும் SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:
இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் அனைவரும் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FILE –  FORM