நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன்11) நடைபெறுகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இடம் : வ.உ.சி கல்லூரி வளாகத்தில் வைத்து அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். மாற்றுத்திறனாளிகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அனைத்துவகை (18 வயதிற்கு மேற்பட்ட) மாற்றுத்திறனாளிகளும் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை UDID (தனித்துவம் வாயந்த தேசிய அடையாள அட்டை) மற்றும் கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.