ESIC 491 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு !!

ஊழியர்களின் மாநில இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC – Employees State Insurance Corporation) அமைப்பானது உதவி பேராசிரியர்கள் (Assistant Professors) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்து உள்ளது.

ESIC உதவி பேராசிரியர் பணிக்கான தகுதிகள்:

வயது:

ESIC உதவி பேராசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. இருப்பினும், இடஒதுக்கீடு மற்றும் பிற சிறப்புப் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

கல்வி:

ஸ்பெஷலிஸ்ட் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் MD/MS-க்கு சமமான DNB இன் MD அல்லது MS அல்லது டிப்ளமேட் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் மூன்று வருட ஆசிரியர் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம் அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம், TET தகுதி அல்லது உதவி பேராசிரியராக இருந்த அனுபவம் தேவை. பல் மருத்துவத்திற்கு எம்.டி.எஸ் அல்லது சம்பந்தப்பட்ட பாடத்தில் அல்லது அதற்கு இணையான ஒன்றில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கற்பித்த அனுபவம் தேவை.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwD/ துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ESIC பணியாளர்கள்), பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது.?

* www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்

* உதவிப் பேராசிரியர் பணி நியமன அறிவிப்புக்கான (Assistant Professor recruitment notice) லிங்கை கிளிக் செய்யவும்

* pdf-ஐ டவுன்லோட் செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்

* தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, கீழ்காணும் முகவரிக்கு போஸ்ட் செய்யவும்.

The Regional Director, ESI Corporation,
Panchdeep Bhawan, Sector-16 (Near Laxmi Narayan Mandir),
Faridabad- 1210002, Haryana.

முன்பே குறிப்பிட்டபடி தேர்வு செயல்முறை தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நேர்காணலை உள்ளடக்கியது. ESIC-யால் முடிவெடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான நேர்காணல் பொருத்தமான இடத்தில் நடைபெறும்.