டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது…!

7,301 குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடத்த மார்ச் 29ம் தேதியன்று வெளியிட்டது. ஏப்.28ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது.

தேர்வு நாள்: 24/07/2022

தேர்வு நேரம்: 9.30 மணி முதல் 12.30 மணி வரை

அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் அனுமதி சீட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

முக்கியமான நாட்கள்:
எழுத்துத் தேர்வு ஜுலை 24
எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு அக்டோபர் , 2022
சான்றிதழ் பதிவேற்றம் அக்டோபர் , 2022
சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் , 2022
கலந்தாய்வு நவம்பர் , 2022

ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் (ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், பொதுப் பிரிவினர்) நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பித்தார்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.