ஆவின் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து Veterinary Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணி: Veterinary Consultant

ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள் : தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Veterinary Consultant கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை Veterinary Council-லில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: மாதம் ரூ.43,000/-

தேர்வு செயல் முறை: விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் ஆவின் நிறுவன ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 11.08.2022 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006.

கூடுதல் விபரங்களுக்கு : https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2022/07/2022072053.pdf