சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 22.072022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் நடை பெரும் இடம் : ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடை பெற உள்ளது .

நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.