குரூப்-4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்து தேர்வு, கடந்த ஜுலை 24ம் தேதி நடந்தது. அந்தத் தேர்வை 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வர்களுக்கு, எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சரியான விடையைக் கோர விரும்பும் விண்ணப்பதாரர், டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் உள்ளிட்ட விவரங்களை அளித்து உத்தேச விடைகளை பெறலாம்.

Answer Key – ஐ எப்படி பார்ப்பது?
· https://www.tnpsc.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

· முகப்பு பக்கத்தில், whats new என்பதன் கீழ், “COMBINED CIVIL SERVICES EXAMINATION- IV (GROUP-IV SERVICES) (DOE: 24/07/2022) (Tentative Keys)” என்பதனை கிளிக் பண்ணவும்.

· உத்தேச விடைகளைத் தெரிந்து கொள்ள ‘GENERAL TAMIL WITH GENERAL STUDIES (Subject Code 003)’ என்பதனை கிளிக் பண்ணவும்.