மக்களை தேடி வரும் மருத்துவம்: திட்டம் தொடங்குவது எப்போது?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சமீபத்தில் மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார்

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 5 முதல் இந்த திட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்றும் இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 6 மாதத்தில் ஒரு கோடி பேர் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்